2025 ஆம் ஆண்டில் இலங்கையின் ஏற்றுமதி வருவாய் 17 மில்லியனை கடந்தது!
2025 ஆம் ஆண்டில் இலங்கையின் மொத்த ஏற்றுமதி வருவாய் 17,252.15 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.
இது 2024 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட புள்ளிவிவரங்களை விட அதிகமாகும் என்று இலங்கை சுங்கத் தரவுகள் தெரிவிக்கின்றன.
இதன்படி ஏற்றுமதி வருவாயானது ஆண்டுக்கு 5.6% வளர்ச்சியைப் பதிவு செய்ததாக ஏற்றுமதி மேம்பாட்டு வாரியம் (EDB) குறிப்பிட்டது.
இதற்கிடையில், டிசம்பர் 2025 இல், பொருட்கள் மற்றும் சேவைகள் இரண்டையும் உள்ளடக்கிய மொத்த ஏற்றுமதிகள் 1,490.49 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது. இது ஆண்டுக்கு ஆண்டு 3.95% அதிகரிப்பைக் குறிக்கிறது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ஏற்றுமதி மேம்பாட்டு வாரியத்தின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான மங்கள விஜேசிங்க, முக்கிய ஏற்றுமதி சந்தைகளின் மீட்பு, நிலையான உற்பத்தி திறன் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு உத்திகளை திறம்பட செயல்படுத்துதல் ஆகியவற்றால் ஆதரிக்கப்படும் இலங்கையின் ஏற்றுமதித் துறையின் மீட்சி மற்றும் போட்டித்தன்மையை இந்த செயல்திறன் எடுத்துக்காட்டுகிறது என்று குறிப்பிட்டார்.





