அரசியல் இலங்கை செய்தி

மஹிந்த ஆட்சியில் மௌனம்: எம்.பி.பி. ஆட்சியில் சீற்றம்! தமிழ்க் கட்சிகளுக்கு அமைச்சர் சாட்டையடி!

கிவுல் ஓயா அபிவிருத்தித் திட்டம் தொடர்பில் தமிழ்க் கட்சிகள் முன்வைத்து வரும் குற்றச்சாட்டுகளை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் Ramalingam Chandrasekhar மறுத்துள்ளார்.

குறித்த திட்டம் இன அல்லது மத அடிப்படையிலான நோக்கங்களுடன் முன்னெடுக்கப்படுவதாக கூறப்படுவது முற்றிலும் தவறான என அவர் தெரிவித்துள்ளார்.

கிவுல் ஓயா திட்டம், குறிப்பிட்ட ஒரு இனத்திற்கோ அல்லது சமூகத்திற்கோ எதிரானதாக அல்லாது, தேசிய அபிவிருத்தி, விவசாய வளர்ச்சி மற்றும் நீர்வள முகாமைத்துவத்தை இலக்காகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட ஒரு அரசாங்கத் திட்டம் என அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

“இந்த ஆட்சியின்கீழ் இனவாதத்துக்கும் மதவாதத்துக்கும் எந்தவிதமான இடமும் இல்லை. அனைத்து மக்களையும் சமமாகக் கருதும் கொள்கையுடனேயே அரசாங்கம் செயல்படுகிறது” என அவர் தெளிவுபடுத்தினார்.

தமிழ் மக்களின் நில உரிமைகளும், சமூக உரிமைகளும் முழுமையாகப் பாதுகாக்கப்படும் என்றும், எந்த ஒரு சமூகமும் அநீதிக்குள்ளாக்கப்பட அனுமதிக்கப்படமாட்டாது என்றும் உறுதியளித்தார்.

சட்டத்துக்கு முரணான நில கையகப்படுத்தல்கள் எதுவும் இடம்பெறாது என்றும், திட்டம் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் உரிய சட்ட நடைமுறைகளின் கீழேயே மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், கிவுல் ஓயா திட்டத்தின் மூலம் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விவசாய உற்பத்தி அதிகரிக்கப்படுவதோடு, ஆயிரக்கணக்கான விவசாயக் குடும்பங்களுக்கு நிலையான நீர்ப்பாசன வசதி கிடைக்கும் என அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்த திட்டத்தை இன அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்காமல், நாட்டின் நீண்டகால அபிவிருத்தித் தேவையாகக் கருதி அணுக வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

” மஹிந்த ஆட்சியில் வடக்கில் அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன.

தமிழ் மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டன.

அந்த காலகட்டங்களில் எல்லாம் அரசாங்கத்துடன் ஒட்டுனியாக இருந்த தமிழ் கட்சிகள் இன்று தமிழ் மக்களுக்கு நன்மை நடக்கும் பொழுது பொங்கி எழுகின்றன.”- எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!