ஹைதராபாத் தீ விபத்து – மூச்சுத்திணறல் ஏற்பட்டு இரண்டு சிறுவர்கள் உட்பட 5 பேர் மரணம்
ஹைதராபாத்தின்(Hyderabad) நம்பள்ளியில்(Nampally) உள்ள ஒரு தளபாடக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு குழந்தைகள் மற்றும் ஒரு வயதான பெண் உட்பட ஐந்து பேர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர்.
ஐந்து பேர் காணவில்லை என்று எங்களுக்குத் தகவல் கிடைத்தது. கட்டிடத்தின் பாதாள அறைக்குள் வெவ்வேறு இடங்களில் இருந்து இரண்டு சிறுவர்கள் மற்றும் ஒரு வயதான பெண் உட்பட ஐந்து உடல்களையும் மீட்டோம்” என்று மூத்த காவல்துறை அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
ஏழு மற்றும் 11 வயதுடைய இரண்டு சிறுவர்கள் கட்டிடத்தின் பாதுகாவலரின் மகன்கள், அவர்களின் குடும்பம் அடித்தளத்தில் வசித்து வந்துள்ளனர்.
தெலுங்கானாவை(Telangana) சேர்ந்த பாதுகாவலர், வெளியில் இருந்ததாகவும் அவரது மனைவியும் வேலைக்காக வெளியே சென்றிருந்ததாகவும் தீ விபத்து நடந்த நேரத்தில் குழந்தைகள் மட்டும் வீட்டில் இருந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





