இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவுக்கு அசோக சக்கரம் விருது அறிவிப்பு
இந்தியாவின் 77வது குடியரசு தினத்தை முன்னிட்டு, சர்வதேச விண்வெளி நிலையத்தை(ISS) பார்வையிட்ட முதல் இந்தியர் என்ற வரலாற்றைப் படைத்த சுபன்ஷு சுக்லாவிற்கு(Subhanshu Shukla) இந்தியாவின் மிக உயர்ந்த அமைதிக்கால வீரதீர விருதான அசோக சக்ரா(Ashoka Chakra) விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம், 41 வயதான சுபன்ஷு சுக்லா விண்வெளிக்குச் சென்ற இரண்டாவது இந்தியர் ஆனார்.
அவர் ஆக்சியம்-4(Axium-4) பயணத்தின் ஒரு பகுதியாக சர்வதேச விண்வெளி நிலையதிற்கு சென்றார்.
1984ல் ராகேஷ் சர்மா(Rakesh Sharma) விண்வெளிக்குச் சென்ற பிறகு, 41 ஆண்டுகள் கழித்து விண்வெளிக்குச் சென்ற இரண்டாவது இந்தியர் சுபன்ஷு சுக்லா ஆவார்.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் கால் பதித்த முதல் இந்திய இஸ்ரோ வீரர் என்ற பெருமையையும் சுபன்ஷு சுக்லா படைத்துள்ளார்.





