பொதுத் தேர்தலில் பிரெக்ஸிட்டை ஆயுதமாக பயன்படுத்தும் தொழிற்கட்சி அரசாங்கம்!
அடுத்த பொதுத் தேர்தலில், வாக்காளர்களை மீண்டும் ஈர்க்கும் நோக்கில், பிரெக்ஸிட்டை ஒரு முக்கிய ஆயுதமாக தொழிற்கட்சி அரசாங்கம் பயன்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோடைகாலத்திற்குள் ஐரோப்பிய ஒன்றியத்துடன் SPS ஒப்பந்தத்தை இறுதி செய்வதே அரசாங்கத்தின் முதன்மை நோக்கமாகும்.
இது பெரும்பாலான சுகாதாரச் சான்றிதழ்கள், உணவு மற்றும் விவசாயத் தரநிலைகள் மீதான வழக்கமான எல்லை சோதனைகளை நீக்கும்.
அத்துடன் பெரும்பாலான பிரித்தானிய மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியாவை விலகியதை விமர்சித்துள்ளதுடன், பலர் அரசாங்கத்தின் தற்போதைய முடிவுக்கு சாதகமான சமிக்ஞையை வெளிப்படுத்தியுள்ளனர்.
ஆகவே மக்களை கவர்வதற்கும், தேர்தலில் வெற்றி பெறுவதற்கும் ஸ்டாமர் பிரெக்ஸிட்டை ஆயுதமாக பயன்படுத்துவார் என விமர்சனங்கள் எழுந்துள்ளன.





