பிரித்தானியாவில் AI மூலம் உருவாக்கப்பட்ட அமெலியா வைரல் மீமாக மாறியது – சமூக ஊடகங்களில் பெரும் சர்ச்சை
இணையத்தில், AI உருவாக்கிய பிரித்தானிய பாடசாலை மாணவியான அமெலியா தற்போது வைரலாகியுள்ளது.
லண்டன் மற்றும் ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் வழியாக நடைப்பயணம் செய்து, பிரித்தானிய மதிப்புகள் மற்றும் சமூக கவனத்தை ஈர்க்கும்
அமெலியாவின் காணொளியே சமூக ஊடகங்களில் இவ்வாறு வைரலாகியுள்ளது.
அமெலியாவை உருவாக்கிய முயற்சி பிரித்தானிய உள்துறை அலுவலகத்தால் நிதியளிக்கப்பட்ட தீவிரவாத எதிர்ப்பு கல்வி விளையாட்டில் இருந்து ஆரம்பமானது.
இதன் நோக்கம் 13–18 வயது இளைஞர்கள் தீவிரவாத கருத்துக்களால் ஈர்க்கப்படுவதை தடுப்பதாக இருந்தது.
ஆனால் இணையத்தில் அமெலியா கதாபாத்திரம் மாற்றப்பட்டு, வலதுசாரி மற்றும் இனவெறி கருத்துக்களுடன் பரப்பப்பட்டு, வைரல் மீமாக மாறியுள்ளது.
இந்த காணொளிகள் தற்போது X மற்றும் Facebook போன்ற தளங்களில் அமெலியா 1.4 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது.
இந்நிலையில் இது, AI மூலம் உருவாக்கப்பட்ட கதாபாத்திரங்கள் மற்றும் மீம்கள் சமூக ஊடகங்களில் எவ்வாறு வேகம் பெறும் என்பதையும், தவறான தகவல்களையும் பரப்பும் அபாயத்தையும் காட்டுகிறது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.





