பௌத்த மதத்திற்கு எதிராக செயல்படும் அரசாங்கம் – நாமல் குற்றச்சாட்டு!
தற்போதைய அரசாங்கம் தனது உயிர்வாழ்விற்காக உள்ளூர் கலாச்சாரம் மற்றும் மதங்களுக்கு எதிராக செயல்படத் தயாராக உள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அமைச்சர் கே.டி. லால்காந்த தனது சமீபத்திய கருத்துகள் மூலம் இந்த உண்மையை உறுதிப்படுத்தியுள்ளார் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “கோட் அணிந்திருப்பவர்களைத் தாக்குவேன் என்று அமைச்சர் லால்காந்த கூறியுள்ளார்.
மேலும், காவி அங்கி அணிபவர்களைப் பற்றி அவர்கள் கவலைப்பட மாட்டார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். இதன் பொருள் அரசாங்கத்தில் உள்ளவர்கள் தங்கள் உயிர்வாழ்விற்காக உள்ளூர் கலாச்சாரத்தையும் மதங்களையும் அழிக்கத் தயாராக உள்ளனர் என்பதுதான்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.





