இங்கிலாந்தில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை கண்காணிக்க உருவாக்கப்படும் அமைப்பு’!
பிரித்தானியாவில் மிகவும் கடுமையான குற்றங்களை எதிர்த்துப் போராடவும், உள்ளூர் காவல் படைகள் அன்றாட குற்றங்களைச் சமாளிப்பதில் கவனம் செலுத்தவும் பிரிட்டிஷ் FBI” உருவாக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த அறிவிப்பை உள்துறைச் செயலாளர் ஷபானா மஹ்மூத் இன்று அறிவிப்பார் எனக் கூறப்படுகிறது.
இந்தக் குழுவானது பயங்கரவாதம், மோசடி மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் போன்ற குற்றச் செயல்களை கண்காணிக்க உதவும் என எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
இதன்படி இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் தேசிய காவல் சேவை (NPS) நிறுவப்படும் என்றும், NPS “உலகத் தரம் வாய்ந்த திறமையாளர்களையும், தொழில்நுட்பத்தையும் ஈர்க்கும் எனவும் உயர்மட்ட தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் இந்த திட்டம் செயற்படுத்தப்படும் திகதி அறிவிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.





