அமெரிக்காவில் குடியேற்ற முகவர்களால் மற்றொரு நபர் படுகொலை – வலுக்கும் எதிர்ப்பு!
மினியாபோலிஸில் (Minneapolis) அமெரிக்க குடியேற்ற முகவர்களால் நேற்று மற்றுமொரு நபர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் உள்ளூர் தலைவர்களிடமிருந்து கடுமையான எதிர்ப்புகளையும் கண்டனங்களையும் தூண்டியது.
முகவர்களின் பாதுகாப்பிற்காக மேற்படி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
கொல்லப்பட்ட நபர் மினியாபோலிஸில் உள்ள படைவீரர் விவகார மருத்துவமனையில் பணிபுரிந்த 37 வயது செவிலியர் அலெக்ஸ் பிரெட்டி (Alex Pretti) என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தொடர்ந்து நூற்றுக்கணக்கான பொதுமக்கள் முகர்களை சுற்றிவளைத்ததாகவும், அவர்கள் மீது கண்ணீர் புகைக்குண்டுகள் வீசப்பட்டதாகவும், தெரிவிக்கப்படுகிறது.
கூட்டாட்சி குடியேற்ற முகவர்களால் மற்றொரு அமெரிக்க குடிமகனை சுட்டுக் கொன்றது தொடர்பாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகத்துடன் மாநில அதிகாரிகள் ஏற்கனவே முரண்பட்டுள்ள நிலையில், மேலும் எதிர்ப்பலைகள் உருவாக வழியமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





