ஐரோப்பா

பிரித்தானிய துருப்புகள் குறித்த சர்ச்சைக்குரிய கருத்து : மாற்றி பேசும் ட்ரம்ப்!

ஆப்கானிஸ்தானில் பிரித்தானிய துருப்புகள் பின்வாங்கியதாக அமெரிக்க ஜனாதிபதி  டொனால்ட் ட்ரம்ப் கூறிய கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது ஆப்கானிஸ்தானில் பணியாற்றிய துணிச்சலான  பிரித்தானிய வீரர்களை அவர் பாராட்டியுள்ளார்.

குறித்த போரில் 457 பேர் உயிரிழந்ததுடன், பலர் மோசமான முறையில் காயமடைந்திருந்திருந்தனர். இதனைத் தொடர்ந்து பிரிட்டன் வீரர்கள் “அனைத்து வீரர்களிலும் மிகச் சிறந்தவர்கள்” என்று ட்ரம்ப் கூறியுள்ளார்.

இது தொடர்பில் ட்ரூத் சமூகவலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “ஐக்கிய இராச்சியத்தின் மகத்தான மற்றும் மிகவும் துணிச்சலான வீரர்கள் எப்போதும் அமெரிக்காவுடன் இருப்பார்கள் ” என்று குறிப்பிட்டுள்ளார்.

“இது ஒருபோதும் உடைக்க முடியாத அளவுக்கு வலுவான பிணைப்பு” என்றும்  ஜனாதிபதி மேலும் கூறினார்.

முன்னதாக ட்ரம்பின் இந்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு அவர் மன்னிப்புக் கோர வேண்டும் என பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டாமர் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!