சிரிய இராணுவம் மற்றும் குர்திஷ் படைகளுக்கும் இடையிலான போர்நிறுத்தம் நீட்டிப்பு
சிரியாவின்(Syria) இராணுவத்திற்கும் குர்திஷ் தலைமையிலான சிரிய ஜனநாயகப் படைகளுக்கும்(SDF) இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தம் மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக சிரிய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
வடகிழக்கு சிரியாவில் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள குற்றம் சாட்டப்பட்ட இஸ்லாமிய அரசு போராளிகளை(ISIL) ஈராக்கில்(Iraq) உள்ள தடுப்பு மையங்களுக்கு மாற்ற அமெரிக்க(America) படைகள் மேற்கொண்ட நடவடிக்கைக்கு ஆதரவாக இந்த நீட்டிப்பு இருப்பதாக பாதுகாப்பு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இந்த நடவடிக்கை பதற்றத்தைத் தணிப்பதற்கும், பொதுமக்களைப் பாதுகாப்பதற்கும் உதவும்” என்று சிரிய ஜனநாயகப் படைகள் ஒரு அறிக்கையில் வலியுறுத்தியது.




