செய்தி விளையாட்டு

ஒருநாள் தொடர் – இங்கிலாந்து அணிக்கு இலகு வெற்றி

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரபல இங்கிலாந்து அணி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

கொழும்பு ஆர். பிரேமதாச(R. Premadasa) மைதானத்தில் இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற்றது .

நாணய சுழற்சியை வென்று முதலில் களமிறங்கிய இலங்கை அணி துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அந்தவகையில், முதலில் களமிறங்கிய இலங்கை அணி 49.3 ஓவர்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்து 219 ஓட்டங்களை பெற்றது.

இலங்கை அணி சார்பில், தனஞ்சய டீ சில்வா(Dhananjaya de Silva) ஆட்டமிழக்காமல் 40 ஓட்டங்களும் சரித் அசலங்க(Charith Asalanka) 46 ஓட்டங்களும் பெற்றனர்.

இந்நிலையில், 220 ஓட்ட இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணி 46.2 ஓவர்களுக்கு 5 விக்கெட்களை இழந்து வெற்றி பெற்றது.

இங்கிலாந்து அணி சார்பில், ஜோ ரூட்(Joe Root) 75 ஓட்டங்களும் ஹரி ப்ரூக்(Harry Brook) 42 ஓட்டங்களும் குவித்தனர்.

இந்த வெற்றியின் மூலம் மூன்ற போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 1-1 என்ற கணக்கில் இங்கிலாந்து சமன் செய்துள்ளது.

மேலும், இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி ஜனவரி 27ம் திகதி நடைபெறவுள்ளது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!