இந்தியா

ராகுல்காந்திமீது அதிருப்தி: பா.ஜ.கவில் இணைவாரா சசி தரூர்?

எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி Rahul Gandhiமீது காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினரான நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் Shashi Tharoor கடும் அதிருப்தியில் உள்ளாரென தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் அவர் விரைவில் தீர்க்கமானதொரு அரசியல் முடிவை எடுப்பார் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றது.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மக்களவை தொகுதி காங்கிரஸ் எம்.பியான சசி தரூர், வெளிவிவகாரக் கொள்கை தொடர்பில் தேர்ச்சி பெற்றவர்.

இலங்கை உட்பட சர்வதேச அரசியல் களத்தில் நன்கு அறியப்பட்டவர். ஒளிவு மறைவு இன்றி வெளிப்படைத்தன்மையுடன் கருத்து வெளியிடக்கூடியவர்.

இந்நிலையில் பிரதமர் மோடியின் செயல்பாடுகளை வெளிப்படையாக அவர் புகழ்ந்து வருகிறார். இதற்கு காங்கிரஸ் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

எனினும், நாட்டு நலனுக்கு எது நல்லதோ அதை செய்வேன் என்று சசி தரூர் உறுதியாக உள்ளார்.

கேரளாவில் விரைவில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.

இதனைமுன்னிட்டு கொச்சியில் கடந்த 19-ம் திகதி நடைபெற்ற மகா பஞ்சாயத்து ஆலோசனை கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்றார்.

அந்தக் கூட்டத்தில் சசி தரூருக்கு , ராகுல் காந்தி மற்றும் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் தகுந்த மரியாதை தரவில்லை என்று தகவல் வெளியானது.

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் கார்கே, ராகுல் காந்தி பங்கேற்ற மேலிடக் கூட்டம் டெல்லியில் நேற்று பிற்பகல் நடைபெற்றது.
இதில் கேரள காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் சசி தரூர் பங்கேற்கவில்லை. இதனால் அவர் விரைவில் தீர்க்கமான அரசியல் முடிவை எடுக்கக்கூடும் என தெரியவருகின்றது. பா.ஜ.கவில் BJP இணைவார் என்ற தகவலும் உள்ளது.

Dila

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!