இங்கிலாந்தை இன்றும் வேட்டையாடுமா இலங்கை?
புத்தாண்டில் ஒருநாள் ODI தொடரை வெற்றிகரமாக ஆரம்பித்த இலங்கை அணி, இங்கிலாந்துடன் இன்று (24) இரண்டாவது போட்டியில் பலப்பரீட்சை நடத்துகின்றது.
3 ஒருநாள் போட்டிகளைக் கொண்ட தொடரில், இன்றைய ஆட்டத்தில் இலங்கை அணி வெற்றிபெற்றால் தொடரை வெல்லும்.
மறு முனையில் இலங்கைக்கு பதிலடி கொடுத்து, தொடரை வெல்வதற்குரிய முனைப்பில் இங்கிலாந்து அணியும் களமிறங்கவுள்ளது.
கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இலங்கை நேரப்படி போட்டி பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகும்.
முதலாவது ஒருநாள் போட்டி நேற்று முன்தினம் (22) ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் இலங்கை அணி 19 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி 27 ஆம் திகதி நடைபெறவுள்ளது.





