பிரதமர் பதவியில் இருந்து விலகத் தயார் – ஹரிணி!
பிரதமர் மற்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரான டாக்டர் ஹரிணி அமரசூரிய, நாட்டு மக்கள் மாற்றம் அவசியம் என்று முடிவு செய்தவுடன், பிரதமர் பதவியில் இருந்து விலகத் தயாராக இருப்பதாகக் கூறினார்.
சுவிட்சர்லாந்தின் டாவோஸில் நடைபெற்ற 2026 உலகப் பொருளாதார மன்ற வருடாந்திர கூட்டத்தில் கலந்து கொண்டப் பின் நாடு திரும்பிய அவர் இன்று பிற்பகல் நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்.
இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “அவர்கள் ஜனாதிபதியை நீக்கத் தவறிவிட்டனர். பின்னர் அவர்கள் பிரதமரை நீக்க முயன்றனர். நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்கொள்ளத் தயாராக இன்று காலை நான் ஓடி வந்தேன். நான் இன்னும் அதற்காகக் காத்திருக்கிறேன்.
“நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவர வேண்டிய அவசியமில்லை. பிரதமர் மாற வேண்டும் என்று இந்த நாட்டு மக்கள் முடிவு செய்யும்போது, நாங்கள் வீட்டிற்குச் செல்லத் தயாராக இருக்கிறோம்.
இந்த நாட்டு மக்களுக்கு நாங்கள் பொறுப்புக்கூற வேண்டியவர்கள், அதன்படி நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம்.” எனத் தெரிவித்துள்ளார்.





