ஐரோப்பா

ஜெர்மனியில் 10 பேரை கொன்ற செவிலியர் மீது வலுக்கும் சந்தேகம் – மறுபரிசீலனை செய்யப்படும் வழக்குகள்!

மேற்கு ஜெர்மனியில் பத்து நோயாளிகளைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட  செவிலியர் ஒருவர் 100 பேரை கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

சந்தேகத்திற்கிடமான பல வழக்குகள் மறுபரிசீலனை செய்யப்பட்டு வருவதாகவும், அதன்படி எண்ணிக்கை  அதிகரிக்கக்கூடும் என்றும் வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தடயவியல் பரிசோதனைகளுக்கு பிறகே உண்மையான செய்திகள் வெளிவரும் எனவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு நவம்பரில், மேற்கு ஜெர்மனியின் ஆச்சனில் உள்ள  பிராந்திய நீதிமன்றம், 10 கொலைகள் மற்றும் 27 கொலை முயற்சிகளில் செவிலியர் ஒருவரை குற்றவாளியாக கண்டறிந்தது. அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இரவு ஷிப்டுகளின் போது தீவிரமாக நோய்வாய்ப்பட்ட நோயாளிகளுக்கு குறித்த செவிலியர் அளவிற்கு அதிகமான மயக்க மருந்துகள் மற்றும் வலி நிவாரணிகளை வழங்கியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இருப்பினும் செவிலியர் குறித்த குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளார். நோயாளிகளுக்கு தூங்க உதவுவதை நோக்கமாகக் கொண்டே மருந்துகளை வழங்கியதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!