மாகாணசபைத் தேர்தல் நடக்காது: ராஜித கருத்து!
தேசிய மக்கள் சக்தி NPP அரசாங்கம் மாகாணசபைத் தேர்தலை நடத்தும் என தான் நம்பவில்லை என்று முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன Rajitha Senaratne தெரிவித்தார்.
தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
அரசாங்கத்துக்கான மக்கள் செல்வாக்கு வீழ்ச்சியடைந்துவருகின்றது. எனவே, தேர்தல் நடத்தப்படும் என நான் நம்பவில்லை.
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பன ஒன்றிணையும் என நம்புகின்றேன். இதற்கு சஜித் இணங்காவிட்டால்கூட இரு தரப்பு இணைவு நிச்சயம் நடக்கும்.” எனவும் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டார்.
இலங்கையில் தற்போதைய சூழ்நிலையில் சவாலை ஏற்கக்கூடிய தலைவராக ரணில் விக்கிரமசிங்க மட்டுமே திகழ்கின்றார் எனவும் அவர் கூறினார்.





