ஐரோப்பா

பிரித்தானியாவை அணு ஏவுகணைகள் மூலம் தாக்குவோம் – மிரட்டி பார்க்கும் ரஷ்யா!

​​அணு ஏவுகணைகள் மூலம் பிரித்தானியாவை அழிக்கப்போவதாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பேராசிரியர் டூம்ஸ்டே என்று அழைக்கப்படும் புடினின்  ஆலோசகர் செர்ஜி கரகனோவ் (Sergei Karaganov) ரஷ்ய தொலைக்காட்சியில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

“குறைந்தபட்சம், இலக்குகளில் ஒன்று பிரித்தானியாவாக இருக்க வேண்டும். நாம் தயாராக இருக்க வேண்டும்,   தலை துண்டிக்கும் தாக்குதலை நடத்தும் திறன் எங்களிடம் உள்ளது என்பதை பிரித்தானியா புரிந்துக்கொள்ள வேண்டும் என எச்சரித்துள்ளார்.

உக்ரைன் – ரஷ்ய போர் குறித்த சமாதான பேச்சுவார்தைகள் இடம்பெற்று வருகின்ற நிலையில், அதனை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் வகையில் இந்த சொற்பொழிவு காணப்படுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இதற்கிடையே சுமார் 04 மணிநேரம் இடம்பெற்ற பேச்சுவார்த்தை கிரெம்ளின் உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதை நிராகரித்ததுடன் முடிவடைந்துள்ளது.

கியேவ் டொன்பாஸ் (Donbas) பகுதியை கொடுத்துவிட்டு சரணடையாவிட்டால் போர் நிறுத்தம் சாத்தியப்படாது என ரஷ்யா கூறியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!