செய்தி விளையாட்டு

100 கோடி ரூபாய் நிதி மோசடியில் சிக்கிய பாபர் அசாம் மற்றும் ரிஸ்வான்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான பாபர் அசாம், முகமது ரிஸ்வான் மற்றும் ஷாஹீன் அப்ரிடி (Babar Azam, Mohammad Rizwan and Shaheen Shah Afridi)ஆகியோர் கோடிக்கணக்கான ரூபாய் நிதி மோசடியில் சிக்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

“பொன்சி” (Ponzi) எனப்படும் அதிக லாபம் தரும் முதலீட்டுத் திட்டத்தின் பெயரில், சுமார் தற்போதைய 12 வீரர்கள் ஒரு பாகிஸ்தானிய தொழிலதிபரிடம் பெரும் தொகையை முதலீடு செய்துள்ளனர்.

ஆரம்பத்தில் லாபம் வழங்கிய அந்த நபர், தற்போது சுமார் 100 கோடி ரூபாயுடன் நாட்டை விட்டுத் தப்பியோடியுள்ளார்.

இதில் பக்கர் சமான் மற்றும் ஷதாப் கான் (Fakhar Zaman and Shadab Khan) உள்ளிட்ட வீரர்களும் தங்களது சொந்தப் பணம் மட்டுமன்றி, உறவினர்களின் பணத்தையும் முதலீடு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) தற்போது தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

உலகக்கிண்ணத் தொடர் நெருங்கும் வேளையில், இந்த நிதி இழப்பு வீரர்கள் மத்தியில் பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Puvan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!