இலங்கை செய்தி

யாழ்ப்பாண சர்வதேச வர்த்தகக் கண்காட்சி கோலாகலமாக ஆரம்பம்

வடக்கு மாகாணத்தின் பொருளாதார உந்துசக்தியாகக் கருதப்படும் ‘யாழ்ப்பாண சர்வதேச வர்த்தகக் கண்காட்சி – 2026’ இன்று 16-வது ஆண்டாக யாழ்ப்பாணத்தில் மிகச் சிறப்பாக ஆரம்பமாகியுள்ளது.

யாழ்ப்பாணம் ரில்கோ ஹோட்டலில் நடைபெற்ற தொடக்க விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன், யாழ்ப்பாணத்தை இலங்கைப் பொருளாதாரத்தின் வர்த்தக உந்துசக்தியாக முன்னிறுத்துவதே எமது கூட்டு இலக்கு எனத் தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கம் வடக்கில் மூன்று புதிய முதலீட்டு வலயங்களை நிறுவுவதற்கான பணிகளை ஆரம்பித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், எம் மாகாண இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தர முதலீட்டாளர்கள் முன்வர வேண்டும் எனவும் பகிரங்க அழைப்பு விடுத்தார்.

இதனைத் தொடர்ந்து, யாழ். முற்றவெளி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள 400-க்கும் மேற்பட்ட காட்சிக்கூடங்களை ஆளுநர் நாடா வெட்டி உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தார்.

விவசாயம், கடற்றொழில் மற்றும் தகவல் தொழில்நுட்பம் எனப் பல்வேறு துறைகளைச் சார்ந்த தயாரிப்புகள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், இந்தியத் துணைத் தூதுவர் ஸ்ரீ சாய் முரளி மற்றும் அரச, தனியார் துறைப் பிரமுகர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Puvan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!