சுவிஸில் புலம்பெயர் இலங்கையர்களுடன் பிரதமர் சந்திப்பு!
சுவிட்சர்லாந்தில் வசிக்கும் புலம்பெயர் இலங்கை சமுகத்தினருடன், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பேச்சு நடத்தியுள்ளார்.
சுவிஸ். டாவோஸில் உலகப் பொருளாதாரமன்ற மாநாடு நடைபெறுகின்றது.
இதில் பங்கேற்பதற்காக சென்ற பிரதமர் அங்கு முக்கிய சந்திப்புகளை நடத்திவருகின்றார்.
உலக தலைவர்கள் மற்றும் சர்வதேச பிரதிநிதிகளை சந்தித்துவருகின்றார்.
இந்நிலையிலேயே அங்கு வாழும் இலங்கையர்களையும் பிரதமர் சந்தித்துள்ளார்.
இது தொடர்பான அவரது முகநூல் பதிவு வருமாறு,
“ சுவிட்சர்லாந்தில் வசிக்கும் இலங்கை வர்த்தகர்கள் மற்றும் தொழில்சார் சமூகத்தினரைச் சந்தித்தேன்.

நம்பிக்கையைக் கட்டியெழுப்புதல், கூட்டுறவைப் பலப்படுத்துதல், இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் நீண்டகால அபிவிருத்திக்காகப் புலம்பெயர் சமூகத்தினர் பங்களிக்கக்கூடிய நடைமுறைச் சாத்தியமான வழிகளை ஆராய்தல் குறித்து இச்சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டது.”- என்றுள்ளது.
அதேவேளை, பிரதமர் (23) பிற்பகல் நாடு திரும்பினார்.





