ஒருநாள் தொடர் – முதல் போட்டியில் இலங்கை அணி வெற்றி
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரபல இங்கிலாந்து அணி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
அந்தவகையில், கொழும்பு ஆர். பிரேமதாச(R. Premadasa) மைதானத்தில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு முதல் ஒருநாள் போட்டி ஆரம்பமானது.
நாணய சுழற்சியை வென்று முதலில் களமிறங்கிய இலங்கை அணி 271 ஓட்டங்களைக் குவித்தது.
இலங்கை அணி சார்பில், குசல் மெண்டிஸ்(Kusal Mendis) ஆட்டமிழக்காமல் 93 ஓட்டங்களை விளாசினார். ஜனித் லியகனே (Janith Liyanage) 46 ஓட்டங்களைப் பெற்றார்.
இந்நிலையில், 272 ஓட்ட இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணி 49.2 ஓவர்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்து 252 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.
இங்கிலாந்து அணி சார்பில், பென் டக்கெட்(Ben Duckett) 62 ஓட்டங்களும் ஜோ ரூட்(Joe Root) 61 ஓட்டங்களும் குவித்தனர்.
இறுதியில், இலங்கை அணி 19 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முன்னிலை வகிக்கிறது.
இந்த முதல் போட்டியில், துடுப்பெடுத்தாட்டம், பந்து வீச்சு மற்றும் களத்தடுப்பில் சிறப்பாக செயல்பட்ட துனித் வெல்லாலகே(Dunith Wellalage) ஆட்ட நாயகன் விருதை வென்றார்.





