கிரீன்லாந்து ஒப்பந்தம் – ட்ரம்ப் கூறும் புதிய கட்டமைப்பு என்ன?
கிரீன்லாந்து தொடர்பாக எதிர்காலத்தில் ஒரு ஒப்பந்தத்தை உருவாக்குவதற்கான கட்டமைப்பு இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக நீடித்த பதற்றங்களுக்கு பின்னர் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
டென்மார்க்கின் அரை தன்னாட்சி பிரதேசமான கிரீன்லாந்தை கைப்பற்றும் டிரம்பின் யோசனைகளுக்கு எதிராக, அமெரிக்காவின் எட்டு நெருங்கிய நட்பு நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.
இதன் போது பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என்ற அச்சுறுத்தலும் முன்வைக்கப்பட்டது.
இந்த நிலையில், ட்ரம்ப் கூறும் ஒப்பந்த கட்டமைப்பில் எவ்வாறான அம்சங்கள் இடம்பெறும் என்பது குறித்தும், அது டென்மார்க் மற்றும் கிரீன்லாந்துக்கு ஏற்றுக்கொள்ளத்தக்கதா என்பது குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளன.
இருப்பினும், கிரீன்லாந்தின் இறையாண்மையை எவ்விதத்திலும் கைவிடமாட்டோம் என டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து தெளிவுபடுத்தியுள்ளன.





