இலங்கை செய்தி

அர்ஜூன மற்றும் அவரது சகோதரருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க மற்றும் அவரது சகோதரர் தம்மிக ரணதுங்க ஆகியோருக்கு எதிராகக் கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு இன்று (ஜனவரி 22, 2026) அறிவித்துள்ளது.

கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டது.

இலங்கை கனிய எண்ணெய் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான மசகு எண்ணெய்யை, அதிக விலையில் ‘ஸ்பொட் டெண்டர்கள்’ (Spot Tenders) மூலம் கொள்வனவு செய்ததன் ஊடாக, அரசாங்கத்திற்குச் சுமார் 800 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்படுத்தியதாக இவர்கள் இருவர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, பிரதான நீதவான் நீதிமன்றில் நிலுவையில் இருந்த இந்த வழக்கின் கோவைகளை மேல் நீதிமன்றிற்கு மாற்றுவதற்குத் தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Puvan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!