பிரித்தானியாவில் புகலிடக் கோரிக்கையாளர்கள் இராணுவ முகாமிற்கு மாற்றம்!
பிரித்தானியாவில் புகலிடக் கோரிக்கையாளர்களை இராணுவ முகாம்களுக்கு மாற்றும் நடவடிக்கை இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி 27 புகலிடக் கோரிக்கையாளர்கள் கிழக்கு சசெக்ஸில் (Sussex) உள்ள க்ரோபரோ (Crowborough) இராணுவ முகாமிற்கு மாற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்துறை அலுவலகம் 500க்கும் மேற்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்களை அவர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் வரை மூன்று மாதங்களுக்கு முகாம்களில் தங்க வைக்க திட்டமிட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக இன்றைய தினம் 27 பேர் மாற்றப்பட்டுள்ளனர். இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஷபானா மஹ்மூத் (Shabana Mahmood), புகலிடக் கோரிக்கை விடுதிகளையும் மூடி எல்லைகளில் ‘ஒழுங்கு மற்றும் கட்டுப்பாட்டை’ மீட்டெடுக்கும் முயற்சிகளின் ‘தொடக்கம்’ இது எனத் தெரிவித்துள்ளார்.





