கிழக்கில் நிறைவுக்கு வந்த போராட்டம் : நோயாளர் பராமரிப்பு சேவைகள் வழமைக்கு!!
கிழக்கு மாகாணத்தில் வைத்தியர்கள் முன்னெடுத்த பணிப்புறக்கணிப்பு நடவடிக்கை இன்று முதல் நிறைவுக்கு வருவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருந்த அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரை உடனடியாக அந்தப் பதவியிலிருந்து நீக்குவதற்கான கடிதத்தை சுகாதார அமைச்சின் செயலாளர் வெளியிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டு வந்த வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று (22) நண்பகல் 2.00 மணியுடன் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது.
அத்துடன் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகராக டாக்டர் ஏ.பி.மசூத் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனம் உடன் அமுலுக்கு வரும் வகையில், சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜயசிங்கவினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.






