செய்தி பொழுதுபோக்கு

பிரபல பின்னணிப் பாடகி ஜானகியின் மகன் காலமானார்

இந்தியத் திரையுலகின் பிரபல பின்னணிப் பாடகி எஸ்.ஜானகியின் மகன் முரளி கிருஷ்ணா இன்று அதிகாலை காலமானார்.

இச்சம்பவம் இசை ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தனது தாயுடன் ஹைதராபாத்தில் வசித்து வந்த முரளி கிருஷ்ணாவுக்கு இன்று அதிகாலை திடீர் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

உடனடியாக மருத்துவ உதவி வழங்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முரளி கிருஷ்ணா தெலுங்குத் திரையுலகில் நடிகராகவும் அறியப்பட்டவர். குறிப்பாக ‘விநாயகடு’, ‘100% லவ்’ உள்ளிட்ட திரைப்படங்களில் அவர் நடித்த கதாபாத்திரங்கள் குறிப்பிடத்தக்கவை.

இசை உலகுக்கு ஈடு இணையற்ற பங்களிப்பை வழங்கிய எஸ்.ஜானகியின் குடும்பத்தில் ஏற்பட்டுள்ள இந்தத் துயரச் சம்பவம் குறித்துத் திரையுலகப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Puvan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!