இலங்கை செய்தி

ராஜபக்ச அணிக்கு டெல்லி அழைப்பு: குடியரசு தின நிகழ்விலும் பங்கேற்பு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச Mahinda Rajapaksa தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன SLPP கட்சியின் உயர்மட்ட குழுவொன்று இந்தியா செல்லவுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச Namal Rajapaksa  தலைமையிலான குழுவினரே டெல்லி செல்லவுள்ளனர்.

இந்தியாவின் குடியரசு தினம் ஜனவரி 26 ஆம் திகதி கொண்டாடப்படுகின்றது.

இந்நிகழ்வில் பங்கேற்பதற்கு, இந்திய அரசாங்கம் இலங்கையின் முக்கிய தரப்புகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இதில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியும் உள்ளடங்குகின்றது.

இதற்கமையவே மொட்டு கட்சி குழுவினர் இந்தியா செல்லவுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ச, இந்திக அனுருத்த, சஞ்சீவ எதிரிமன்ன , மிலிந்த ராஜபக்ச உட்பட மேலும் சிலரும் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

இந்த பயணத்தின் போது, உலகின் முன்னணி பேரிடர் முகாமைத்துவ நிறுவனங்களில் ஒன்றாகக் கருதப்படும் ஒடிசா பேரிடர் முகாமைத்துவ மையத்திற்கும், இந்தக் குழு கண்காணிப்பு பயணத்தை மேற்கொள்ளவுள்ளது.

டெல்லி பயணத்துக்கு முன்னதாக, இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்தோஷ் ஜாவை, அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் மொட்டு கட்சியினர் சந்தித்து, கலந்துரையாடியுள்ளனர்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!