அரசியல் இலங்கை செய்தி

NPP ஆட்சியை எதிரணியால் கவிழ்க்க முடியாது: அமைச்சர் திட்டவட்டம்!

தேசிய மக்கள் சக்தி NPP அரசாங்கம் சிறப்பாக செயல்பட்டுவருகின்றது. தற்போதைய எதிர்க்கட்சியால் இந்த அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது என்று அமைச்சர் சமந்த வித்யாரத்ன samantha vidyaratna தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

“ நெருக்கடி நிலையில் இருந்த நாட்டையே நாம் பொறுப்பேற்றோம். இதற்கிடையில் பேரிடரும் ஏற்பட்டது. எனினும், சவாலை நாம் எதிர்கொண்டோம்.

பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

நாட்டில் சுனாமி அனர்த்தம் ஏற்பட்டபோது நாட்டுக்கு கிடைக்கப்பெற்ற உதவிகள் கொள்ளையடிக்கப்பட்டன. ஆனால் எமது ஆட்சியில் அவ்வாறு நடக்கவில்லை. மக்களுக்குரிய உதவித் திட்டங்கள் வெளிப்படை தன்மையுடன் முன்னெடுக்கப்பட்டன.” – எனவும் அமைச்சர் சமந்த வித்யாரத்ன குறிப்பிட்டார்.

அதேவேளை, நாட்டுக்கு தேவையானதொரு எதிர்க்கட்சி எமது நாட்டில் இல்லை என்பதும் பேரிடராகும்.

நாட்டுக்காக இணைந்து செயல்படவேண்டிய தருணங்களில்கூட பொறுப்பை மறந்து, எதிரணிகள் அரசியல் நடத்தும் நிலை காணப்படுகின்றது.

பாதாள குழுக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்போது சில எதிரணி அரசியல் பிரமுகர்களுக்கு நடுக்கம் ஏற்படுகின்றது. ஊழல், மோசடிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்போதும் அவர்களுக்கு ஆட்டம் ஏற்படுகின்றது.

மிகவும் மோசமான முறையிலேயே பிரதான எதிரணி செயல்பட்டுவருகின்றது. இந்த எதிர்க்கட்சியால் அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது. ஏனெனில் அரசாங்கம் சிறப்பாக செயல்படுகின்றது.”- என அமைச்சர் சமந்த வித்யாரத்ன மேலும் கூறினார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!