டொனால்ட் டிரம்பின் காசா அமைதி வாரியத்தில் இணையும் பாகிஸ்தான்
காசாவில் நீடித்த அமைதியை நிலைநாட்ட, அமெரிக்க(America) ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின்(Donald Trump) “அமைதி வாரியத்தில்” பாகிஸ்தான்(Pakistan) இணையும் என்று அதன் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
டிரம்பின் காசா திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு இறுதியில் அமைக்கப்பட்ட இந்த வாரியம் உலகளாவிய மோதல்களைத் தீர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இதுவரை 20க்கும் மேற்பட்ட நாடுகள் இணைய ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்கா கூறியிருந்தாலும், சில நாடுகள் இந்த முயற்சிக்கு எச்சரிக்கையுடன் பதிலளித்துள்ளன.
பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப்பிற்கு(Shehbaz Sharif) டிரம்ப் விடுத்த அழைப்பைத் தொடர்ந்து பாகிஸ்தான் இந்த முடிவை எடுத்ததாக அமைச்சகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தொடர்புடைய செய்தி
ட்ரம்பின் அமைதி வாரியத்தில் சேர 10 இற்கும் மேற்பட்ட நாடுகள் ஒத்துழைப்பு!





