மகாராஷ்டிராவில் கணவருடன் ஏற்பட்ட தகராறில் ஒரு வயது மகளை கொன்ற பெண்
மகாராஷ்டிராவின்(Maharashtra) லத்தூர்(Latur) மாவட்டத்தில், கூலித் தொழிலாளியான தனது கணவருடன் ஏற்பட்ட தகராறில் ஒரு பெண் தனது ஒரு வயது மகளைக் கொன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஷ்யாம்(Shyam) நகர் பகுதியில் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக 30 வயதுடைய பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
தனது 34 வயது கணவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்திற்குப் பிறகு, ஆத்திரமடைந்த அந்தப் பெண் வீட்டிலிருந்து கூர்மையான கத்தியை எடுத்து தனது மகளின் முகம், வயிறு, மார்பு, இடுப்பு, தலை மற்றும் அந்தரங்கப் பகுதிகளில் குத்தியதாகக் கூறப்படுகிறது.
குழந்தை சம்பவ இடத்திலேயே இறந்ததாக காவல்துறை அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
குழந்தையின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், குறித்த பெண்ணை கைது செய்து அவர் மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.





