எடின்பர்க் பாடசாலைகளில் கொண்டுவரப்படவுள்ள முக்கிய மாற்றம்!
பிரித்தானியாவின் எடின்பர்கில் உள்ள அனைத்து உயர்நிலை பாடசாலைகளிலும் தொலைபேசி பாவனையை கட்டுப்படுத்துவது தொடர்பில் பரிசீலனை செய்யப்பட்டுள்ளது.
முன்னோடி திட்டமாக இரண்டு உயர்நிலை பாடசாலைகளில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதை தொடர்ந்து இதனை விரிவுப்படுத்த எடின்பர்க் நகர கவுன்சில் ஆலோசனை நடத்தி வருகிறது.
இதற்கமைய போர்டோபெல்லோ (Portobello) மற்றும் குயின்ஸ்ஃபெர்ரி (Queensferry) உயர்நிலைப் பாடசாலைகள் நாள் முழுவதும் தொலைபேசிகளை தவிர்க்கும் பூட்டக்கூடிய பைகளைப் பயன்படுத்துகின்றனர்.
மருத்துவ அல்லது பராமரிப்புத் தேவைகள் உள்ள மாணவர்களுக்கு பாடசாலைகளில் தொலைபேசி அவசியம் என்ற விவாதம் இருந்தாலும் சோதனைத் திட்டம் நேர்மறையான கருத்துக்களைப் பெற்றுள்ளதாக கவுன்சில் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் கல்வி ஊழியர்களுக்கான ஆலோசனை வரும் மார்ச் மாதம் வரை நடைபெறும் எனவும் கவுன்சில் அறிவித்துள்ளது.
இதேவேளை ஆகஸ்ட் 2024 இல் ஸ்காட்டிஷ் அரசாங்கம் பாடசாலைகளில் கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்துவது குறித்த வழிகாட்டுதலை வெளியிட்டது, ஆனால் கட்டுப்பாடுகள் ஒவ்வொரு பாடசாலையை பொறுத்து மாறுபடும்.





