இங்கிலாந்து ஒருநாள் தொடர்: சரித் தலைமையிலான இலங்கை அணி அறிவிப்பு
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நாளை கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது.
இந்தத் தொடருக்கான 17 பேர் கொண்ட இலங்கை குழாத்தை இலங்கை கிரிக்கெட் சபை இன்று அறிவித்துள்ளது.
சரித் அசலங்க தலைமையிலான இந்த அணியில், பெதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், வனிந்து ஹசரங்க, கமிந்து மெண்டிஸ் மற்றும் மகேஷ் தீக்ஷன போன்ற நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.
இவர்களுடன் கமில் மிஷார, பவன் ரத்நாயக்க மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஈஷான் மலிங்க ஆகியோரும் குழாத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று ஒருநாள் போட்டிகளும் கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளன.
ஒருநாள் தொடரைத் தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் இரு அணிகளும் மோதவுள்ளன.
நாளை பிற்பகல் ஆரம்பமாகவுள்ள முதலாவது ஒருநாள் போட்டியில், சொந்த மண்ணில் இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றியுடன் தொடரை ஆரம்பிக்கும் முனைப்பில் இலங்கை அணி காத்திருக்கிறது.





