ஐரோப்பா

ஸ்பெயினில் மற்றுமொரு ரயில் விபத்து – 37 பேர் காயம்!

ஸ்பெயினின் பார்சிலோனா (barcelona) அருகே பயணிகள் ரயில் ஒன்று தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில் ரயில் ஓட்டுநர் உயிரிழந்துள்ளார். அத்துடன் 37 பேர் காயமடைந்த நிலையில், 05 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கெலிடா (Gelida ) மற்றும் சாண்ட் சாதுர்னி (Sant Sadurní) இடையே  நேற்று மாலை குறித்த ரயில் விபத்துக்குள்ளானதாக உள்ளுர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அனைத்து பயணிகளும் ரயிலில் இருந்து வெளியேற்றப்பட்டதாக கேட்டலோனியா பிராந்திய தீயணைப்பு ஆய்வாளர் குறிப்பிட்டுள்ளார்.

சீரற்ற வானிலை காரணமாக மேற்படி விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகின்ற நிலையில், விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!