இலங்கை செய்தி

ஜனாதிபதி வீதியில் நடப்பதால் பயனில்லை – வீட்டுத் திட்டங்களுக்கான கொடுப்பனவை கோரி யாழில் போராட்டம்

யாழ் மாவட்ட வீட்டுத் திட்டங்களுக்கான கொடுப்பனவுகளை வழங்குமாறு கோரி வட மாகாண ஆளுநர் அலுவலகத்துக்கு முன்பாக இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தற்போதைய ஆளுநரான நா. வேதநாயகன், 2019ஆம் ஆண்டு யாழ் மாவட்ட செயலராக கடமையாற்றிய காலத்தில் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்ட வீட்டு திட்டங்களுக்கான கொடுப்பனவுகள் இன்று வரை வழங்கப்படவில்லையென போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் அக்கால பகுதியில் வீட்டு திட்டங்களை பெற்ற பயனாளிகள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் தமது அன்றாட வாழ்க்கையை நடத்தி வரும் நிலையில் மழை காலங்களில் தங்குவதற்கு இடம் இன்றி சிரமங்களை எதிர்கொள்வது பல வருடங்களாக தொடர்ந்தும் இடம்பெறுகிறதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போதைய அரசாங்கம் பாரபட்சமற்ற அரசாங்கம் என கூறி ஆட்சிக்கு வந்த பின்னர் கடந்த ஆட்சியரிடம் பெற்ற வீட்டு திட்டங்களுக்கான கொடுப்பனவுகளை வழங்காமல் தங்களது ஆட்சியில் புதிய வீட்டு திட்டங்களுக்கான கொடுப்பனவை வழங்குகிறார்கள் என்றும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த செயற்பாடு பாதிக்கப்பட்ட எமக்கு மிகவும் மன வேதனையை தருவதோடு தற்போதைய ஆளுநர் கூட இது தொடர்பில் மௌனமாக இருப்பது நமக்கு மிகுந்த மன வருத்தத்தை தருகிறது என அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் சென்ற ஜனாதிபதி அனுரகுமாரா திசநாயக்க வீதியில் நடந்து திரிகிறார் ஆனால் யாழ் மாவட்டத்தில் வீடுகள் இல்லாமல் அரைகுறை வீடுகளில் தங்கி உள்ளோரை சந்திப்பதற்கு அவருக்கு நேரம் கிடைக்கவில்லை என்றும் விமர்சித்துள்ளனர்.

ஆகவே எமது பிரச்சனை தொடர்பில் வடமாகண ஆளுநருக்கு மீண்டும் தெரியப்படுத்தியுள்ளோம் எமது பிரச்சினையை விரைந்து தீர்க்க விடியின் எமது போராட்டம் தொடரும் என போராட்டக்காரர்கள் ஆதங்கம் வெளியிட்டனர்.

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!