ட்ரம்பின் வரி விதிப்பு : ஐரோப்பிய பங்கு சந்தைகள் சரிவு, உச்சம் தொட்ட தங்கத்தின் விலை!
கிரீன்லாந்து விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகள் மீது ட்ரம்ப் வரி விதித்துள்ள நிலையில், உலக சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் உச்சம் தொட்டுள்ளன.
இதற்கமைய இன்றைய தினம் தங்கம் 1.6 சதவீதம் உயர்ந்து அவுன்ஸ் ஒன்று $4,689 (£3,498.30) ஆக பதிவாகியுள்ளது. அதேபோல் ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை $94.08 (£70.19) என்ற சாதனை உச்சத்தை எட்டியுள்ளது. சில மணி நேரங்களில் குறைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையே ஐரோப்பா முழுவதும் பங்குச் சந்தைகள் பாரிய சரிவை சந்தித்துள்ளன. பிரான்சில், Cac 40 1.6 சதவீதம் சரிந்தது, ஜெர்மனியின் Dax 1.4 சதவீதம் சரிந்தது, ஸ்பெயினின் Ibex கிட்டத்தட்ட 1 சதவீதம் சரிந்துள்ளது.
மேலும் ஐரோப்பாவில் பட்டியலிடப்பட்டுள்ள அமெரிக்க பங்குகளும் சரிந்தன. Nvidia மற்றும் Microsoft இரண்டும் 2.2 சதவீதம் சரிந்தன, அதே நேரத்தில் Google உரிமையாளர் Alphabet இன் பங்குகள் 2.4 சதவீதம் சரிந்துள்ளன.





