ட்ரம்பின் சில புவிசார் முயற்சிகளுக்கு பிரித்தானியா ஆதரவு
வர்த்தகப் போர் எவருடைய நலனுக்கும் உதவாது என பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.
டவுனிங்கில் (Downing) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் சில புவிசார் முயற்சிகளை பிரித்தானியா ஆதரிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
குறிப்பாக காசாவில் போர்நிறுத்தத்தை முன்னெடுப்பதற்கு பிரித்தானியா தனது முழுமையான ஆதரவை வழங்கும் என்றும் பிரதமர் கூறியுள்ளார்.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு எதிராக அமெரிக்கா, உக்ரைன் மற்றும் பிற நட்பு நாடுகளுடன் பிரித்தானியா நெருக்கமாக செயல்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதிகரிக்கும் செலவுகள் பொதுவாக மிகக் குறைந்த சக்தி கொண்ட மக்களுக்கு அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
விநியோகச் சங்கிலிகள் உடைந்தால் வீடுகள், சிறு வணிகங்கள் மற்றும் உழைக்கும் மக்கள் முதலில் பாதிக்கப்படுவார்கள் என்றும் ஸ்டார்மர் கூறியுள்ளார்.
இதனால், தொழிற்கட்சி அரசாங்கம் சாதாரண மக்களின் நலனுக்காகப் போராட ஒவ்வொரு கருவியையும் பயன்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.





