செய்தி

காசா அமைதி வாரியத்தில் இணைய புட்டினுக்கு அழைப்பு!

காசா அமைதி வாரியத்தில் இணைந்துக்கொள்ள ரஷ்ய ஜனாதிபதி புட்டினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

“அமைதி வாரியத்தில் சேர புடினுக்கு இராஜதந்திர வழிகள் மூலம் அழைப்பு வந்தது,” என்று ஜனாதிபதியின் நீண்டகால பத்திரிகை செயலாளர் டிமிட்ரி பெஸ்கோவ்  (Dmitry Peskov) அறிவித்துள்ளார்.

“இந்த திட்டத்தின் அனைத்து விவரங்களையும் நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம், அனைத்து நுணுக்கங்களையும் தெளிவுபடுத்த அமெரிக்க தரப்பைத் தொடர்பு கொள்ள விரும்புகிறோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேல்-ஹமாஸ் போரை முடிவுக்குக் கொண்டு வந்து காசாவை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான ஒரு லட்சிய அமைதித் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை அமெரிக்கா மேற்கொண்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக பல உலகத் தலைவர்களுக்கும் ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். அத்துடன் காசா அமைதி வாரியத்தில் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்க விரும்பும் நாடுகள் முதல் வருடத்திற்குள் 1 பில்லியன் டொலர்களை செலுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!