ஸ்பெயின் ரயில் விபத்து – அதிகரிக்கும் மரணங்கள்!
ஸ்பெயின் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது.
இன்று அதிகாலையில் 21 பேர் உயிரிழந்ததாக உள்துறை அமைச்சகம் தெரிவித்திருந்த நிலையில் தற்போது பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சுமார் 170 பேர் காயமடைந்துள்ளதுடன், 75 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், ஐந்து குழந்தைகள் உட்பட 48 பேர் இன்னும் மருத்துவமனையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.





