பிரித்தானியாவில் மீண்டும் குறையும் வெப்பநிலை – பனிப்பொழிவு குறித்து எச்சரிக்கை
இந்த மாத இறுதியில் பிரித்தானியா முழுவதும் வெப்பநிலை மீண்டும் குறையக்கூடும் என்பதால் பனிப்பொழிவு ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக வானிலை முன்னறிவிப்பாளர்கள் எச்சரித்துள்ளனர்.
வானிலை அலுவலகத்தின் தகவலின்படி, இந்த வார இறுதியில் வெப்பநிலை பெரும்பாலும் சாதாரண அளவில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெப்பநிலை 6 முதல் 10 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை முழுவதும் சில பகுதிகளில் அடர்த்தியான மூடுபனி காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் தொடங்கும் மழை, வடக்கு பகுதிகளிலும் பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
சில இடங்களில் பலத்த மழை வீழ்ச்சி பதிவாக கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





