தென் அமெரிக்க கூட்டமைப்பு – ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையில் ஒப்பந்தம் கைச்சாத்து!
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் தென் அமெரிக்க கூட்டமைப்பான மெர்கோசூர் ஆகியவற்றின் உயர் அதிகாரிகள் நேற்று பராகுவேயில் (Paraguay) சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திட்டுள்ளனர்.
25 ஆண்டுகால பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு குறித்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இரு பிராந்தியங்களுக்கிடையில் கட்டணங்களைக் குறைப்பதற்கும் வர்த்தகத்தை அதிகரிப்பதற்கும் வடிவமைக்கப்பட்ட இந்த ஒப்பந்தத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் வழங்க வேண்டும்.
மேலும் மெர்கோசூர் உறுப்பினர்களான அர்ஜென்டினா (Argentina), பிரேசில் (Brazil) , பராகுவே (Paraguay) மற்றும் உருகுவே ஆகியவற்றின் சட்டமன்றங்களால் அங்கீகரிக்கப்பட வேண்டும்.
ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் (Ursula von der Leyen) மற்றும் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டா (Lula da Silva) ஆகியோர் மெர்கோசூர் நாடுகளின் தலைவர்களுடன் இணைந்து மேற்படி ஒப்பந்தத்தை கைச்சாத்திட்டுள்ளனர்.





