வெனிசுலாவின் தொழில்துறை அமைச்சரை பதவி நீக்கம் செய்த இடைக்கால ஜனாதிபதி
வெனிசுலாவின்(Venezuela) இடைக்கால ஜனாதிபதி, பதவி நீக்கம் செய்யப்பட்ட தலைவர் நிக்கோலஸ் மதுரோவின்(Nicolas Maduro) நெருங்கிய கூட்டாளியான தொழிலதிபர் அலெக்ஸ் சாப்பை(Alex Saab) தொழில்துறை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கியுள்ளார்.
இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ்(Delcy Rodriguez), கொலம்பிய(Colombia) வம்சாவளியைச் சேர்ந்த அலெக்ஸ் செய்த சேவைக்காக நன்றி தெரிவித்து அவர் புதிய பொறுப்புகளை ஏற்றுக்கொள்வார் என்று குறிபிட்டுள்ளார்.
ஜனவரி 3ம் திகதி மதுரோவை வெளியேற்றிய அமெரிக்க இராணுவத் தாக்குதலைத் தொடர்ந்து வாஷிங்டனின் அழுத்தத்தின் மத்தியில் இந்த மாற்றம் வந்துள்ளது.
சோசலிசத் தலைவருக்கு பணமோசடி செய்பவராக பணியாற்றிய குற்றச்சாட்டுகள் தொடர்பாக இன்டர்போல் நோட்டீஸ் காரணமாக 2020ல் அலெக்ஸ் கைது செய்யப்பட்டார்.
பின்னர் அமெரிக்காவுடனான கைதிகள் பரிமாற்றத்தின் ஒரு பகுதியாக 2023ல் விடுவிக்கப்பட்ட அலெக்ஸ், 2024ல் மதுரோவால் தொழில்துறை அமைச்சர் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.





