உலகம் செய்தி

டிரம்பின் திட்டங்களுக்கு எதிராக கிரீன்லாந்து மற்றும் டென்மார்க்கில் போராட்டம்

கிரீன்லாந்து(Greenland) மற்றும் டென்மார்க்கில்(Denmark) ஆயிரக்கணக்கான மக்கள், அமெரிக்க(America) ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்(Donald Trump), தன்னாட்சி பெற்ற டேனிஷ் பிரதேசமான கிரீன்லாந்தை கையகப்படுத்தும் திட்டங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகன்(Copenhagen) உள்ளிட்ட பல நகரங்களிலும் கிரீன்லாந்தின் தலைநகர் நூக்கிலும்(Nuuk) ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

அமெரிக்க காங்கிரஸின் பிரதிநிதிகள் குழு டென்மார்க் தலைநகருக்கு வருகை தந்த பொது பேரணிகள் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில், தனது திட்டத்தை எதிர்க்கும் ஐரோப்பிய நாடுகளுக்கு வரிகளை விதிப்பதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

டென்மார்க், நோர்வே(Norway), சுவீடன்(Sweden), பிரான்ஸ்(France), ஜெர்மனி(Germany), இங்கிலாந்து(UK), நெதர்லாந்து(Netherlands) மற்றும் பின்லாந்து(Finland) ஆகிய நாடுகளின் பொருட்கள் பிப்ரவரி 1 முதல் 10% அமெரிக்க வரிக்கு உட்பட்டதாக இருக்கும் என்று உண்மை சமூக தளத்தில் ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!