விக்டோரியா காட்டுத்தீ பேரழிவு ; சுயாதீன விசாரணைக்கு பிரதமர் உத்தரவு
விக்டோரியாவில் இந்த ஆண்டு ஏற்பட்டுள்ள பேரழிவு தரும் காட்டுத்தீ தொடர்பாக முறையான மற்றும் சுயாதீனமான மறுஆய்வு நடத்தப்படும் என பிரதமர் ஜெசிந்தா ஆலன் உறுதியளித்துள்ளார்.
4 இலட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பு மற்றும் 260 வீடுகள் உட்பட சுமார் 900 கட்டிடங்களைச் சாம்பலாக்கியுள்ள இந்தக் காட்டுத்தீயால், ஒருவர் உயிரிழந்துள்ளதோடு ஆயிரக்கணக்கான கால்நடைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
தீயணைப்பு உபகரணங்களின் பற்றாக்குறை மற்றும் தயார்நிலை குறித்து எழுந்த கடுமையான விமர்சனங்களைத் தொடர்ந்தே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அவசரநிலை மேலாண்மை இன்ஸ்பெக்டர் ஜெனரல் தலைமையில் இந்த மதிப்பாய்வு நடைபெறும் என்றும், பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டு வர அரசாங்கம் முழுமையாகத் துணை நிற்கும் என்றும் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.





