நாடாளுமன்றத்தில் “டித்வா புயல்”!
டித்வா புயல் சம்பந்தமாக விசேட நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைப்பதற்கான யோசனை தொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்படவுள்ளது.
எதிர்வரும் 21 ஆம் இது தொடர்பில் விவாதம் நடத்தப்படவுள்ளதென தெரியவருகின்றது.
டித்வா புயல் தொடர்பில் முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கப்பட்டும், உரிய முன்னாயத்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என எதிரணிகள் குற்றஞ்சாட்டியுள்ளன.
எங்கே தவறு நடந்துள்ளது, பொறுப்பு கூற வேண்டியது யார் என்பது தொடர்பில் விசாரிப்பதற்காக நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை
அமைக்க வேண்டும் என வலியுறுத்தின.
இந்நிலையில் தெரிவுக்குழு அமைப்பதற்குரிய யோசனை சபையில் முன்வைக்கப்பட்டுள்ளது. அது தொடர்பான விவாதமே 21 ஆம் திகதி நடத்தப்பட்டு, யோசனை நிறைவேற்றப்படவுள்ளது.





