காசாவில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் மூத்த தலைவர் கொலை
மத்திய காசா(Gaza) பகுதியில் உள்ள டெய்ர் அல்-பலாவில்(Deir al-Bala) இஸ்ரேல்(Israel) நடத்திய வான்வழித் தாக்குதல்களில் ஹமாஸின்(Hamas) ஆயுதப் பிரிவின் மூத்த அதிகாரி ஒருவர் உட்பட ஏழு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இறந்தவர்களில் ஒருவர் டெய்ர் அல்-பலாவில் உள்ள குழுவின் ஆயுதப் பிரிவின் உள்ளூர் தளபதியான முகமது அல்-ஹோலி(Mohammed al-Holy) என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அல்-ஹோலி குடும்பத்தின் மீதான தாக்குதலுக்கு ஹமாஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த தாக்குதலில் உயிரிழந்த மற்ற ஆறு பேரில் 16 வயது சிறுவனும் அடங்குவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
அக்டோபரில் போர் நிறுத்தம் அமலுக்கு வந்ததிலிருந்து 400க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களும் மூன்று இஸ்ரேலிய வீரர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.





