உலகம் செய்தி

ஈரானில் போராட்டங்களுக்குப் பின் தெஹ்ரானில்  பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு – வான்வெளி மீண்டும் திறப்பு

எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்ற நிச்சயமற்ற நிலை அதிகரித்துள்ளதால், ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னதாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த ஈரானின் வான்வெளி தற்போது மீண்டும் விமான போக்குவரத்துக்கு திறக்கப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களாக நடைபெற்ற போராட்டங்களும் பெரும்பாலும் தணிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

போராட்டங்களால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து ஈரான் அதிகாரப்பூர்வமாக எந்த எண்ணிக்கையும் வெளியிடவில்லை.

எனினும், பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக அரசு தரப்பு தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில், 1,000க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.

அரசு எதிர்ப்பு போராட்டக்காரர்களை தூக்கிலிட தெஹ்ரான் திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவல்களை ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி மறுத்துள்ளார்.

போராட்டக்காரர்கள் கொல்லப்படுவது நிறுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியதையடுத்து, இந்த மறுப்பு வெளியானது.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!