உக்ரைனில் அவசரகால நிலை அறிவிப்பு!
உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelensky), எரிசக்தித் துறையில் இன்று அவசரகால நிலையை அறிவித்துள்ளார்.
நாட்டின் உள்கட்டமைப்பு மீதான தொடர்ச்சியான ரஷ்ய தாக்குதல்களைத் தொடர்ந்து தடைபட்ட மின்சார விநியோகத்தை நிவர்த்தி செய்வதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும்.
குறிப்பாக கடந்த வாரம் கியேவில், மின்சாரம் மற்றும் வெப்பத்தை மீட்டெடுக்க பணியாளர்கள் 24 மணி நேரமும் பணியாற்றியதாக தெரிவிக்கப்படுகிறது.
இரவு நேர வெப்பநிலை -20C க்கு அருகில் குறைந்து வருவதால், மக்கள் குளிரில் சிக்கி தவிக்கின்றனர். அத்துடன் பழுதுபார்க்கும் பணிகளும் கால தாமதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையிலேயே அவசரகால நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பணியாளர்கள் நெகிழ்வு தன்மையும் பணியாற்ற முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.





