விக்டோரியா காட்டுத்தீ நிவாரணம்: மின்சாரம் இன்றி தவிப்போருக்கு நிதி உதவி
அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் நிலவும் கடும் காட்டுத்தீ காரணமாக மின்சாரத்தை இழந்துள்ள மக்களுக்கு உதவும் வகையில், புதிய நிவாரணத் திட்டங்களை மாநில பிரதமர்
ஜெசிந்தா ஆலன் அறிவித்துள்ளார். மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து வழங்கும் இந்த 128 மில்லியன் டொலர் பெறுமதியான திட்டத்தின் கீழ், ஏழு நாட்களுக்கு மேல் மின்சாரம் இன்றி தவிக்கும் ஒரு குடும்பத்திற்கு வாரம் 2,380 டொலர்கள் வீதம் நிதி வழங்கப்படவுள்ளது.
அதிகபட்சமாக மூன்று வாரங்களுக்கு ஒரு குடும்பம் 7,140 டொலர் வரை இந்த இழப்பீட்டைப் பெற முடியும்.
சுமார் 3,000 மின்சார வாடிக்கையாளர்கள் இதன் மூலம் நன்மையடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்ற
அதேவேளை, பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் சிறு வணிகங்களுக்கும் மேலதிக நிதி உதவிகள் மற்றும் கடன் சலுகைகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மோசமான வானிலையால் ஏற்பட்ட இந்த பாதிப்புகளில் இருந்து மக்கள் மீண்டெழ இத்திட்டம் பாரிய துணையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.





