25 வருட கால வரலாற்றில் முதல் முறையாக மருத்துவ வெளியேற்றம் குறித்து அறிவித்த நாசா!
சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) இருந்து நான்கு உறுப்பினர்கள் மருத்துவ வெளியேற்றத்திற்கு தயாராகி வருவதாக நாசா அறிவித்துள்ளது.
விண்வெளி வீரர் ஒருவர் வெளியிடப்படாத உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளதாகவும், இதன்காரணமாக குழுவினர் வெளியேறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய ஸ்பேஸ்எக்ஸ் க்ரூ-11 (Nasa’s SpaceX Crew-11) டிராகன் காப்ஸ்யூல் (Dragon capsule) மூலம் அவர்கள் பூமிக்கு திரும்புவார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.
மருத்துவ தனியுரிமையை மேற்கோள் காட்டி, எந்த குழு உறுப்பினர் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது குறித்த கூடுதல் விவரங்களை நாசா விண்வெளி நிறுவனம் வெளியிடவில்லை.
நாசாவின் 25 வருடக் கால விண்வெளி வரலாற்றில் வீரர் ஒருவர் சுகவீனமடைந்த நிலையில் வெளியேற்றப்படுவது இதுவே முதல் முறையாகும்.





